சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா!

0
257

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கியிருந்த 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்‌, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நேற்று உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹராவில் உள்ள பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சரண் அடைந்தனர். நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பின்னர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு கைதி எண் 9234, இளவரசிக்கு 9235 வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here